ஆகஸ்ட் முதல் துருக்கியிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

Date:

துருக்கி இஸ்தான்புல் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைக்கான துருக்கி தூதுவருக்கும் இலங்கை துறைமுக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் விமான போக்குவரத்து அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது.

இது தொடர்பாக நடந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் துருக்கிய தூதுவர் டெமெட் செகர்சியோக்லு மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருடன் துருக்கிய ஏர்லைன்ஸ் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் Fathi Bozkurt அவர்களும் உடனிருந்தார்.

தற்போது துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைத்தீவை ஊடறுத்து வருவதனால் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகமாகின்றது. இந்தத் தாமதம் பயணிகளால் விரும்பப்படுவதில்லை, என தூதுவர் வலியுறுத்தினார்.

இதனால் இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நேரத்தையும் இடத்தையும் ஒதுக்குமாறு துருக்கிய ஏர்லைன்ஸின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்தக் கோரிக்கையானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் ஆகியோருக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

100 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட புகழ்பெற்ற விமான நிறுவனமான டர்கிஷ் ஏர்லைன்ஸ், ஐரோப்பாவின் வான்கூவர் மற்றும் நியூயார்க்கை இணைக்கும் விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த புதிய சேவையானது ஐரோப்பிய பயணிகளுக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி அவர்கள் இலங்கைக்கு வருவதற்கும் ஊக்கமளிக்கும் எனவும் துருக்கிய விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கணிசமான அளவில் ஊக்கமளிக்கும் அதே வேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்க்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தக் கலந்துரையாடலின் போது அழுத்திக் கூறினார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...