ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவு!

Date:

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து பொதுத் தேர்தலின் போது பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தேர்தல் வலையமைப்பின் 8ஆவது பொதுச் சபையில், 18 நாடுகள் மேலும் இருபத்தி ஒன்பது அமைப்புகளில், PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அதன் பணிப்பாளராகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த  பிலி கோரா பொதுச் செயலாளராகவும், தாய்லாந்தைச் சேர்ந்த  பி சாகுல் பொருளாளராகவும், இந்தோனேசியா, மியான்மர், மங்கோலியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, 2026 மே வரை அவர் பதவியில் இருப்பார் ரோஹன ஹெட்டியாராச்சி அவர்கள் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராவதற்கு முன்னர் பதின்மூன்று வருடங்கள் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் செயலாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...