மேல் மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் இன்று (01) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்.
இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம பிரதேச செயலகம், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.