இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

Date:

இன்று (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்கள் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு,

கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல்கோட்டை, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அனைத்து கிளை வீதியிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ப நீரைச் சேகரிக்குமாறு பிரதேசவாசிகளிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய விரும்பினால், 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...