இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.