இம்ரான்கானின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9 ஆம் திகதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை இராணுவம் அவரை கைது செய்தது.

பஞ்சாப் மாகாண பொலிஸார் இம்ரான்கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

இதனிடையே ,ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானை இஸ்லாமாபாத் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்க கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் இம்ரான்கான் ஏன் நேரில் ஆஜராகவில்லை என அவரது சட்டதரணிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இம்ரான்கானின் சட்டத்தரணி, குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் நீதிமன்றத்திற்கு வருவார் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசாங்க தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகாத இம்ரான்கானுக்கு பிணை வழங்கக்கூடாது என வாதிட்டர்.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இம்ரான்கானின் பிணை மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...