இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்?

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய, வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சாள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தற்போது, ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பியதன் பின்னர், மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...