உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் அயோத்திக்கும் இடையிலான ஆழமான உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் இராமாயண காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.
இதன் மூலம் இந்தியாவின் குடிமக்கள், குறிப்பாக உத்தரபிரதேசம், இலங்கையில் உள்ள இராமாயண தலங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இந்தநிலையில் இராமரின் சகோதரன் இலட்சுமணனைக் குணப்படுத்துவதற்காக அனுமான் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவனி மூலிகை செடிகளை உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் நட வேண்டும் என்ற இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை, உத்தரபிரதேச முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார் என்று இந்திய செய்தி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.