மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜயந்த தனபால, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாகப் பணியாற்றியதோடு, ஜெனீவாவில் இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றினார்.
மேவேளை ஜயந்த தனபால 1998-2003 க்கு இடையில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார்.
இவர் 30/12/1938 அன்று கண்டியில் பிறந்தார், மத்திய மாகாணத்தின் மாத்தளையில் மிக முக்கியமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.
தனது அடிப்படைக் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.