இலங்கை அதிகரிக்கும் கொவிட் தொற்று!

Date:

இலங்கையில் நாளாந்தம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் நாளாந்தம் சுமார் 05 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 03 நாட்களில் கொவிட் தொற்று காரணமாக 02 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நாட்களில் காணப்படும் சுவாச நோய் நிலைமையுடன் இந்த கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்று டொக்டர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

இதன்படி,  தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பாதிக்கப்படக்கூடிய தரப்பினர் கொவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சு கொவிட்-19 பரிசோதனைகளை முற்றிலும்  கைவிட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் இலங்கையும் கவனம் செலுத்த வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தடுப்பூசி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், கொவிட் பரிசோதனைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்வியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...