இலங்கை கிரிக்கெட் சபை: அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று!

Date:

கொழும்பில் இன்றைய தினம் (20-05-2023) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ மற்றும் சமந்த தொடன்வல உள்ளிட்டோர் தலைவர் பதவிக்காகவும் தற்போதைய செயலாளர் மொஹான் டி சில்வா, ரொஷான் இத்தமல்கொட, நலின் அபோன்ஸ் உள்ளிட்டவர்கள் செயலாளர் பதவிக்காகவும் போட்டியிடவுள்ளனர்.

இன்றைய வாக்கெடுப்பின் போது 2 உப தலைவர்கள், உப செயலாளர், உப பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...