ஈரானுக்கு எதிராக 50 ஆண்டுகள் பொருளாதார தடை விதித்த உக்ரைன்!

Date:

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகின்றது.

இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது.

இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்து தெரிவித்தார்.

அப்போது இந்த சட்டமூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில் நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த சட்டமூலம் வழிவகை செய்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...