உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அஜய் பங்கா உலக வங்கியின் 14 ஆவது தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார நிபுணர் மற்றும் டிரம்ப் அரசாங்கத்தில் பணியாற்றிய அமெரிக்க திறைசேரியின் அதிகாரியுமான இவர் ஜூன் 2 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.