ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மே தின விழாவில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் .ருவான் விஜயவர்தன உள்ளிட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்கள் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றிய நிலையில் ஐ.தே.க சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டம் ஆரம்பமானது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின விழா “2048 ஜெயகமு” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.