கம்பளையில் சுமார் 6 நாட்கள் காணாமல் போயிருந்த நிலையில், புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் வெளியிட்டுள்ளார்.
ஊர் மக்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பி, கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் கூறியதன் பின்னரே, பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடம், நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, சந்தேகநபரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
Click photo👇