கம்பஹா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்  நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கம்பஹா மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 36911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இம் மாதத்தில் 7203 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 22 வீதமான நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் இந்திக வீரசிங்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர், பாடசாலை மாணவர்கள் என வைத்திய நிபுணர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...