கல்வித் துறையின் சீர்திருத்தங்களை இடைநிறுத்த கல்வி அமைச்சு தீர்மானம்!

Date:

கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்ததன் காரணமாக இவ்வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக தொகுதி முறையை அறிமுகப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டிருந்ததுடன், அதன் முன்னோடி திட்டமாக 108 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சில பாடசாலைகளில், முதலாம், ஆறு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பாடங்கள் தொடர்பான தொகுதிகள் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு முன் அலகுகள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறிப்பிட்ட பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகளை இந்த தவணையிலிருந்து ஆரம்பிக்க அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

அவற்றில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி, கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ஜீவன் தொண்டமான் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த உபகுழுவினால் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2048 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலும் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே அமைச்சரவை உபகுழுவின் கருத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...