களுத்துறை மாணவி மரணம்: இறுதியாக அழைப்பை மேற்கொண்ட நபர்?

Date:

களுத்துறையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சம்பவ தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவரை விசாரித்து நேற்று (10) வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியை தனக்கு நன்கு தெரியும் என ஆசிரியர் கூறியதாகவும், விசாரணையில் மாணவி தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், விசாரணையின் ரகசியத்தன்மை காரணமாக அந்த தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்படமாட்டாது என்று பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பலர் மாணவிக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்த மாணவிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னரே அவர் மேல் மாடியின் யன்னல் ஊடாக குதித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் மாணவியின் தொலைபேசி தரவுகளைப் பெற்றுக் கொண்டு இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி சந்தேக நபர் ஒருவரால் கடலில் வீசப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடிக்க கடற்படையின் சுழியோடிகள் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டதாக களுத்துறை (தெற்கு) பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பாடசாலை மாணவியுடன் சென்ற இளம் ஜோடியிடம் விசாரித்ததில், அவரது கைபேசி கடலில் வீசப்பட்டமை தெரியவந்தது.

மேலும் பல முக்கிய தகவல்கள் அந்த கைபேசியிலிருந்து வெளிவரலாம் என்பதால் சந்தேகநபரான இளைஞர் ஒருவர் அதனை கடலில் வீசி எறிந்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...