குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் குவைட்டுக்கான இலங்கைத் தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதுவருடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.
ஏழு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்த பெண் தற்கொலை செய்திருக்க முடியாது என அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரிடம் தெரிவித்த இலங்கைத் தூதுவர், இது தொடர்பான விரிவான அறிக்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.