கொழும்பு ஸாஹிராவில் நடைபெற்ற ‘RPSL Consortium’ அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்!

Date:

முஸ்லிம்களுடைய தேசிய, சமூக விவகாரங்களில் இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் சமூகவியலாளர்கள் கலந்துகொண்டு சமூக மேம்பாட்டுக்காக பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)  RPSL Consortium அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் மருதானை ஷாகிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் வக்பு சபையின் தலைவரும் சட்டத்தரணி சப்ரி ஹலிம்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அலி சப்ரி பிரதான உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வு வசீம் முக்தார் தலைமையில் ‘முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றது.

கருத்தரங்கின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ரவூப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பைசர் முஸ்தபா,கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உமர் காமில், தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூக்,கலந்துகொண்டதுடன்  ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் சிறப்பு மார்க்க சொற்பொழிவையாற்றினார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...