கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது!

Date:

எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 75% க்கும் அதிகமான பேக்கரிகள், கோதுமை மாவை இலங்கையில் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்வதாகவும், அந்த நிறுவனங்கள் தமது விலைகளை அதிகரித்தால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும்,  மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவினால் அனைத்து பேக்கரிகளுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இரு நிறுவனங்களின் கோதுமை மா ஒரு கிலோ 210, 215 ரூபா என்ற விலையில் பேக்கரிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...