கோழி இறைச்சி, மீன், தேங்காய் விலை அதிகரிப்பு

Date:

கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஆயிரம் முதல் 1,200 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோவொன்று 1, 500 ரூபா முதல் 1,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று 1,900 ரூபாவுக்கும், பலயா மீன் கிலோவொன்று 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விலை உயர்விற்கு இணையாக சாதாரண சந்தைகளிலும் மீனின் விலை உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...