சித்தியடையாத 350 ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

Date:

ஆசிரிய நியமனத்திற்காக, தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என, அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார் இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய கல்வியற் கல்லூரியில் 7 ஆயிரத்து 800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார் அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர்.

எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

அந்த பரீட்சையை காலந்தாழ்த்தாது எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...