விவாதத்தை கேட்பதற்காக ஜனக ரத்நாயக்கவுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட போதும் தங்கம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களிக்க முடிந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதேநேரம் இது தான் சிஸ்டம் மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.