ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான எரிசக்தி அமைச்சரின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆம் சரத்தின் அடிப்படையில் அமைச்சரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மின்சார கட்டண அதிகரிப்பு யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டது முதல், ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...