துருக்கியில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் ரஜப் தையிப் அர்தூகான் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கெமல் கிலிக்டரொலு என்ற பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.
கிலிக்டரொலு வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் யாரேனும் ஒரு வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.
அவ்வாறு பெரும்பான்மையை பெறவில்லை என்றால் வரும் 28ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
துருக்கியில் 20 ஆண்டுகள் எர்டோகன் ஆட்சி செய்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.