துருக்கி ஜனாதிபதி தேர்தல்: அர்தூகானுக்காக ஒன்று திரண்ட 1.7 மில்லியன் மக்கள்!

Date:

துருக்கியின் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மே 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகானின் நேற்றைய பேரணியில் குறைந்தது 1.7 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 21 வருடங்களாக தேர்தல்கள் மூலம் துருக்கியை ஆளுகின்ற நடப்பு ஜனாதிபதி அர்தூகானுக்கான ஆதரவை இந்தப் பேரணி எடுத்துக் காட்டுவதாக அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திரண்டிருந்த பெருந்திரளான மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி அர்தூகான், கடந்த 21 ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டினார்.

மேலும், தனது அரசாங்கம் கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய வருமானத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாகவும் வேலைவாய்ப்புக்கள், உணவு, மற்றும் 10.5 மில்லியன் புதிய வீடுகளை யும் கட்டியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஜனாதிபதிப் பதிக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானுடன், கெமல் கிலிக்டரோக்லு, முஹர்ரம் இன்ஸ் மற்றும் சினான் ஓகன் ஆகியோரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...