இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் ஆளுநருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கரின் 106ஆவது பிறந்த தினம் நாளை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பின்வரும் நேரங்களில் அன்னாரது நற்பணிகள் குறித்த நினைவுக் குறிப்புரைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பண்பலை அலைவரிசைகளில் ஒலிபரப்பாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.