பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிகோலும் நெசவு தொழில்: பாகிஸ்தானில் சர்வதேச கண்காட்சி!

Date:

TEXPO எனப்படும் மிகப்பெரிய கண்காட்சியான சர்வதேச ஆடைக் கண்காட்சி  2023 மே 26 – 28 கராச்சியில்  பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள எக்ஸ்போ மையத்தில் நடைபெறும்.

TEXPO இன் 4வது கண்காட்சியான பாகிஸ்தானின் ஆடை  மற்றும் தோல் துறையில் நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்திக்க பொதுவான தளத்தை வழங்குகிறது.

மேற்படி இந்த கண்காட்சி தொடர்பாக ஊடக சந்திப்பை பாகிஸ்தானிலும் பல வெளிநாடுகளிலும் தோல் மற்றும் ஜவுளி உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள பிரபல தொழில் அதிபர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுபைர் மோடிவாலா மற்றும் செயலாளர் இக்பால் குரேஷி விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

‘நிலைத்தன்மைக்கு வழி நெசவு என்ற இவ்வாண்டிற்கான தொனிப்பொருளானது பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறை கால நிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஈடுகொடுத்த வண்ணம் முன்னேறி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

அதிகாரசபையின் மேற்படி முன்னெடுப்பானது இத்துறைகளில் பாகிஸ்தானின் சாதனைகளை பறைசாற்றியதுடன், பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைக்கு நீடித்த தீர்வுகளை வழங்குவதில் அதிகாரசபையின் அர்ப்பணிப்பை கோடிட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

கடந்த 2022 ஆண்டு பாகிஸ்தானை தாக்கிய பெரும் வெள்ளம் பாகிஸ்தானின் தோல் மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைக்கு நீடித்த தீர்வுகளை துரிதமாக அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இம்முறை துணி மற்றும் தோல் உற்பத்திகளின் சர்வதேச கண்காட்சியில் 200 இற்கும் அதிகமான நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கொலம்பியா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஈரான் உட்பட்ட 77 நாடுகளின் வர்த்தகர்கள் மற்றும் உலகளாவிய சுமார் 350 துறைசார் நிபுணர்கள் வருகை தரவுள்ள இக்ககண்காட்சியில் தோலை பயன் படுத்தி தயாரித்த ஆடைகள், பாதணிகள், ஜவுளி வகைகள், டெனிம் ஆடைகள், விளையாட்டு ஆடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.

மேற்படி நிகழ்விற்கு வருகை தந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகளை வரவேற்ற திரு மோடிவாலா, பாகிஸ்தான் பூர்த்தியான துணி உற்பத்தி வசதிகளையும் வநியோக வாய்ப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

வுநுஓPழு கண்காட்சியின் போது மே 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ரிஸ்வான் பேக், ஸானா ஸஃபினாஸ், தீபக் பெர்வானி, அத்னான் பர்தேசி, வர்தா ஸலீம், ஹூமா அத்னான், ஷமீல் அன்சாரி, போன்ற பாகிஸ்தானின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிங்க் ட்ரீ ஜே, ஜஃபர்ஜீ போன்ற பிரபல நிறுவங்கள் தயாரித்த ஆடைகள், சுற்றுலா ஆடைகள், ஆடம்பர ஆடைகள் போன்றவை காட்சிப் படுத்தப்படும். மேற்படி உற்பத்திகளை பாகிஸ்தானின் பிரபர ஆண் மற்றும் பெண் மாடல்கள் சபைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கண்காட்சிக்கு சமாந்திரமாக மே 26 கராச்சி ஆளுனர் மாளிகையில் கலாசார நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் போது பாகிஸ்தானிய கலைஞர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்படும்.

வுநுஓPழு கண்காட்சி பற்றிய மேலதிக விபரங்களை அறிய  www.texpo.com.pk. இணையத்தளத்திற்கு உட்பிரவேசிக்கவும்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...