பங்களாதேஷ்- மியன்மாரை தாக்கிய மோக்கா புயல்!

Date:

வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் பங்காளதேஷ், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் பங்காளதேஷ்-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை தாக்கியது.

குறிப்பாக பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது பங்காளதேஷ் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உட்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக மோக்கா புயல் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...