பாவனைக்குதவாத 30 மில்.ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் !

Date:

இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதேநேரம், கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த உற்பத்திகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி சந்தையில் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...