சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்துகொள்ளவுள்ளனர்.