புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கியதற்காக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் சில 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று விடுவிக்கப்பட்டனர்.