‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளதுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் திரைப்படம் மே 5ஆம் திரைக்கு வரவிருக்கிறது.
கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க் கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி வெளியானது. அதில், கேரளாவில் 32,000 பெண்கள் காணாமல்போனதன் பின்னணியை இந்தப் படம் வெளிக்கொண்டுவருவதாகக் கூறப்பட்டது.
அனைவரின் கண் முன்பாகவே, சாதாரண பெண்களை பயங்கரவாதிகளாக மாற்றும் ஆபத்தான விளையாட்டு கேரளாவில் நடைபெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.