மரக்கறி விலைகள் 40 சதவீதம் உயர்வு!

Date:

கடந்த வாரத்தை விட, நேற்றைய தினம் (29)  காய்கறிகளின் மொத்த விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

தம்புள்ளை மொத்த சந்தைக்கு வழங்கப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலையும் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நாட்களில் மொத்த காய்கறி வாங்குவோர் தொகையும் குறைந்துள்ளது.

நேற்று (29) தம்புள்ளை மொத்த சந்தைக்கு சுமார் 800,000 கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதாகவும், மீகொட, வெயங்கொட மற்றும் வெலிசறை பொருளாதார நிலையங்களில் இருந்து மொத்த கொள்வனவாளர்கள் சுமார் 150,000 கிலோ மரக்கறிகளை கொள்வனவு செய்ததாகவும் தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் வர்த்தக சங்கத்தின்தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பச்சை மிளகாய், கறி மிளகாய், பீன்ஸ் மற்றும் லீக்ஸ் ஆகியவற்றின் விலைகள் சுமார் 50% அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பயிர்கள் சேதம் அடைந்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (29) நடந்த மொத்த விற்பனை விலையின்படி பீன்ஸ் 350 – 375 ரூபாய், பச்சை மிளகாய் 350 – 360 ரூபாய், கறி மற்றும் மிளகாய் 370 – 400 ரூபாய், வெண்டைக்காய் 250 – 300 ரூபாய், கேரட் 250 – ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதுதவிர வெள்ளரி ரூ.70-75க்கும், பூசணிக்காய் ரூ.60-65க்கும் விற்கப்பட்டது.

மலையகம், வடமேற்கு, யாழ்ப்பாணம் மற்றும் ஊவா பிரதேசங்களில் இருந்து பெறப்படும் அனைத்து வகையான மரக்கறி வகைகளின் மொத்த விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, உள்ளூர் உருளைக்கிழங்கு 250 – 260 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 150 – 160 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய உருளைக்கிழங்கு 95 – 105 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டதாக அவர்கூறியுள்ளார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...