சுதந்திர கல்வி மற்றும் வைத்தியதுறையினை தனியாருக்கு விற்பதாக கூறி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பூங்காவிலிருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக வைத்தியத்துறை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு தாமரை தடாகம் சந்திக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுகாதார அமைச்சை நோக்கி சென்ற போது, பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.