மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

மலையக ரயில் பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதை இதுவரை சீர்செய்யப்பட்டவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் ரயில்கள் மற்றும் பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களுக்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...