Sunday, November 8, 2026

மார்ச் மாதத்தில் 1,037.5 மில். அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானம்

1 min read · 1 reads

2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 2021 உடன் ஒப்பிடும்போது இது 5.14% குறைவு என EDB தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக முக்கிய சந்தைகளில் முக்கிய தயாரிப்புகளுக்கு உருவாக்கப்பட்ட குறைவான தேவை மேலும் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.