மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று டிப்ளமோ பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!

Date:

அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழு தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.

அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 

Popular

More like this
Related

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...