முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது உகண்டா!

Date:

புதிதாக கொண்டு வரப்பட்ட முறைசாரா பாலியல் எதிர்ப்பு சட்டத்திற்கு உகண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி அனுமதி வழங்கியுள்ளார்.

இதன் மூலம் உலகிலேயே முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு
எதிராக மிகவும் கடுமையான சட்டத்தை கொண்டு வந்த நாடாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டா மாறியுள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 30 நாடுகளில் ஓரின உறவுகள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக கடுமையான தண்டனைகளும் நடைமுறையில் உள்ளன.

எனினும் உகண்டா இதற்கு மேல் ஒரு அடி முன்னேறி முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

உகண்டா சட்டங்களுக்கு அமைய ஒரே பாலின உறவு என்பது கடுமையான குற்றம். எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் பரவலாம். எனவே, அத்தகைய உறவில் தொடர்வது மோசமான குற்றமாக கருதப்படும்.

ஓரினச்சேர்கையாளர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தல் போன்ற தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

மறுபுறம், முறைசாரா முறையில், சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.

மேலும் ஓரின சேர்கையாளர்கள் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டமை மற்றும் குழுக்களால் கொலை செய்யப்பட்ட வழக்குகளும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

உகண்டா  கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, ஓரினத்தை சேர்ந்தவர்கள் உடலுறவு கொள்வது, சேர்ந்து வாழ்வது, திருமணம் செய்து கொள்வது கடும் குற்றமாகும்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

மேலும் முறைசாரா பாலியல் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

உகண்டாவை போன்று கென்யா மற்றும் தன்சானியா நாடுகளும் ஓரினச்சேர்கையாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளன.

இதேவேளை இந்தச் சட்டம் உகண்டாவில் உள்ள LGBTQ+ சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, பலர் மற்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்ல தங்கள் அடையாளங்களை மறைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த புதிய சட்டத்தால் உகாண்டாவில் இருந்து தப்பிக்க வேண்டியவர்களுக்கு உதவ சர்வதேச அமைப்பான Trans Rescue நிதி திரட்டி வருகிறது.

உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர். 2013 ஆம் ஆண்டில், உகண்டாவில் இதேபோன்ற சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு மற்றும் உள்ளூர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு அதைச் செயல்படுத்த முடியவில்லை.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...