முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி. ஹாரிசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது ஆனால் ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்தார்.
“சுமார் 20 மூத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.