IPL 2023: ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது குஜராத் அணி!

Date:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. அணித்தலைவர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ஓட்டமும், டிரெண்ட் போல்ட் 15 ஓட்டமும் எடுத்தனர்.

குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சகா, ப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்தனர். ப்மன் கில் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். சகா 41 ஓட்டத்தில், பாண்ட்யா 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...