IPL: லக்னோ அணியை வீழ்த்தியது பெங்களூர்!

Date:

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான ஆரம்பம் கொடுத்தனர்.

விராட் கோலி 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, டூ பிளசிஸ் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டம் சேர்த்தார். மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ஓட்டங்களுக்கு, கிளென் மேக்ஸ்வெல் 4 ஓட்டங்களும், பிரபுதேசாய் 6 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தார்.

15.2 ஓவர்களில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது.

டூ பிளசிஸ் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இவரைத் தொடர்ந்து களமிறங்கிய லாம்ரோர் 3 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 16 ஓட்டங்களில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுக்க பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோ அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேயர்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் பதோனி 4 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய க்ரூணல் பாண்ட்யா, தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டாயினஸ் முறையே 14, மற்றும் 13 ஓட்டங்களை எடுத்து நடையை கட்டினர்.

நிக்கோலஸ் பூரான் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், கிருஷ்ணப்பா கவுதம் 13 பந்துகளில் 23 ஓட்டங்களை குவித்த நிலையில், ரன் அவுட் ஆனார். இவருடன் துடுப்பெடுத்தாடிய ரவி பிஷ்னோய் 5 ஓட்டத்தில் ஆட்டமிழக்க லக்னோ அணி 16 ஓவர்களில் 79 ஓட்டங்கள் 8 விக்கெட் இழந்தது தவித்தது.

எனினும், அமித் மிஸ்ரா மற்றும் நவீன் உல் ஹக் ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்கள் சேர்த்தது. நவீன் உல் ஹக் 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க லக்னோ அணித்தலைவர் கே.எல் ராகுல் கடைசியில் களமிறங்கினார்.

கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அணித்தலைவர் கே.எல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணியின் கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் இரு பந்துகளில் ஓட்டம் ஏதும் கிடைக்காத நிலையில், மூன்றாவது பந்தை அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு விரட்டினார். இதைத் தொடர்ந்து 3 பந்துகளில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நான்காவது பந்தில் ஓட்டம் ஏதும் கிடைக்காத நிலையில், ஐந்தாவது பந்தில் அமித் மிஸ்ரா அவுட் ஆக பெங்களூர் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...