வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.
மனித உரிமைகள் தொடர்பில் புரிதல் இல்லாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணையாளர்கள் மூவரும் நடந்து கொள்வதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆணையாளர்களாக களுபஹன பியரதன தேரர், நிமல் கருணாசிறி மற்றும் விஜித நாணயக்கார ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.