வலிநிவாரணி மருந்து கொடுப்பது தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

Date:

தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், நோயாளிகளின் உடல் வலியைக் குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வருவதாகவும், டெங்கு நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளை வழங்கி நோயாளிகளின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பராசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோயாளிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...