விரைவில் டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை: பந்துல

Date:

பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பயணச்சீட்டு மற்றும் தொடரூந்து பயணச்சீட்டு என்பன கியூ. ஆர். முறைமையாக மாற்றப்படவுள்ளதாகவும் அதனூடாக வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறிள்ளார்.

அத்துடன் முடியுமான அளவு விரைவாக டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு, தவறிழைக்கும் சாரதிகளுக்கு மதிப்பெண் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...