வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு பல வெசாக் வலயங்கள், பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் கொழும்பில் பாரிய பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெசாக் விடுமுறை காலம் முழுவதும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...