வை.எல்.எஸ். ஹமீதின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்!

Date:

மறைந்த வை.எல்.எஸ். ஹமீத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்   இன்று (25) இஷா தொழுகையைத் தொடர்ந்து தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறும்.
அன்னாருக்கான ஜனாஸா தொழுகை நாளை (26) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கல்முனை முகைய்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்  இன்று அதிகாலை தனது 61 ஆவது வயதில் காலமானார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

அன்னார் மர்ஹூம்களான யூனுஸ் லெப்பை றாவியா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வரும். Y.L. அமீர், Dr.Y.L. யூசுப், மர்ஹூம் Y.L.நிஸாயிர், Dr.Y.L. அன்புதீன்(ஓமான்), Y.L. சம்சுதீன்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...