10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சென்னை சாதனை!

Date:

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் (Qualifier 1) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதன் மூலம் இந்த சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் பெற்றுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 6 முறையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆர்.சி.பி. அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் கிண்ணத்தை தவறவிட்டுள்ளது.

சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 87 ஓட்டங்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 60 ரன்கள் விளாசினார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...