உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசாங் தவா சாதனை படைத்துள்ளார்.
ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகத்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
உலகின் மிக உயரமான எவரெட் சிகரத்தை 26வது முறையாக ஏறி 46 வயதான நேபாளி ஷெர்பா பசா தவா சாதனை படைத்துள்ளார்.
ஒரு ஹங்கேரிய வாடிக்கையாளருடன் ஏறிய பசாங் தவா இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது நபர் என்ற பெயரை இது தொடர்பாக பேசிய அரசாக சுற்றுலா அதிகாரி பிக்யன் கொய்ராலா , ஷெர்பா பசாங் தவா 8,849 மீட்டர் தூரத்தை 26 முறை ஏறி சக நேபாள வழி காட்டியான கமி ரீட்டா ஷெர்பாவின் சாதனையை சமன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்பொழுது எவரெட் சிகரத்தை ஏறி வரும் கமிரீட்டா ஷெர்பா உச்சியை அடைந்தால் மற்றொரு உலக சாதனை படைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த பெண் நைலா கியானி இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான ஏறும் பருவத்தில் எவரெட் சிகரத்தை அடைந்த முதல் வெளிநாட்டவர் என அதிகாரி தவா பியூட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் எவரெட் சிகரத்தை ஏற இந்த ஆண்டு 467 வெளிநாட்டவர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழகியுள்ளது குறிப்பிடத்தக்கது.